பிரேசிலில் நடந்த ஒரு அதிரடி சம்பவம் தற்போது வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில் ஒரு பெண் திருடனை அசத்தலான முறையில் வீழ்த்தும் காட்சி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
அதாவது ரெஸ்டாரெண்ட் ஒன்றின் வெளிப் பகுதியில் நண்பருடன் உணவருந்திக் கொண்டிருந்த அந்தப் பெண், திடீரென ஒரு மோசடிக் காட்சி நடந்ததை புரிந்துகொண்டு, சிறந்த நேர்த்தியுடன் அருகிலிருந்த நாற்காலியை தூக்கி,பொது மக்களிடம் இருந்து தப்பித்து ஓடி வந்த திருடரின் முகத்தில் வீசினார். இதனால் அந்த திருடன் சைக்கிளிலிருந்து கீழே விழுந்தார்.
அடுத்த நொடியே, ஓடி வந்த மக்கள் அவரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் திருடனை அதிகாரிகள் வந்தபிறகு அவர்களின் கையில் ஒப்படைத்தனர். இந்த வீடியோ வைரலாகி, பலர் பெணியின் தைரியத்தையும், வேகமான முடிவெடுக்கும் திறமையையும் பாராட்டி, “அவர் ஒரு வீராங்கனை!” எனக் கூறி வருகின்றனர்.