ஐபிஎல் 2025 தொடரில் மொத்தம் 10 அணிகள் மோதும் நிலையில், கேப்டன்களின் சம்பளம் மற்றும் அவர்கள் எந்த அணிக்கு வழிநடத்தவுள்ளனர் என்பதற்கான விவரங்கள் வெளியாகியுள்ளது. அதிகபட்ச சம்பளம் பெறும் கேப்டன் ரிஷப் பண்ட், ரூ. 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்ததாக, ஸ்ரேயாஸ் ஐயர் ரூ. 26.75 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். மூன்றாவது இடத்தில் பேட் கம்மின்ஸ் இருக்க, ஹைதராபாத் அணிக்கு ரூ. 18 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். ருதுராஜ் கெய்க்வாட் (CSK), சஞ்சு சாம்சன் (RR), அக்சர் படேல் (DC), சுப்மன் கில் (GT), ஹர்திக் பாண்டியா (MI) ஆகியோரும் 16-18 கோடி வரையிலான தொகைக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த தொகைக்கு கேப்டனாக தேர்வான ரஹானே
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானே ரூ. 1.5 கோடிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார், இது ஐபிஎல் 2025 தொடரில் குறைந்த தொகைக்கு தேர்வு செய்யப்பட்ட கேப்டன் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் கோப்பையை வென்று வழங்கிய நிலையில், அவரை அணியில் இருந்து விடுவித்ததற்கு பிறகு, அனைவரும் வெங்கடேஷ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்த்தனர். ஆனால், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் ரஹானே கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், ஐபிஎல் 2025 தொடரில் சில புதிய அணியாக்கங்கள், கேப்டன் மாற்றங்கள் ஆகியவை ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.