தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நமீதா. இவர் ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த நிலையில் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகினார். அவருக்கு ஹீரோயின் வாய்ப்பு குறைந்த நிலையில் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக கலந்து கொண்டார். அதோடு இரண்டு படங்களில் வில்லியாகவும் நடித்தார். ஆனால் அந்த படங்கள் போதிய அளவு வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு நடிகை நமீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்த நிலையில் அரசியலில் மட்டுமே முழு நேர கவனத்தை செலுத்த இருப்பதாக கூறினார்.
தமிழக பாஜக கட்சியின் நிர்வாகியாக நமிதா இருக்கும் நிலையில் தன் கணவருடன் சேர்ந்து அடிக்கடி கோவில்களுக்கு செல்கிறார். அந்த வகையில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் கோவிலுக்கு இன்று நமீதா தன் கணவருடன் சென்றார். அங்கு அவரைப் பார்த்த ரசிகர்கள் ஆர்வமுடன் வந்து அவருடன் சேர்ந்து செல்பி எடுத்துக் கொண்டனர். அப்போது ஒரு மூதாட்டி திடீரென வந்து நடிகை நமீதாவின் கைகளை பற்றி கட்டிப்பிடித்தார். பின்னர் அவரை கட்டியணைத்த நமிதா பின்னர் ஒரு மாலையை வாங்கி அவரின் கழுத்தில் போட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக வருகிறது.