நகம் வெட்டாமல் வந்த 8-ஆம் வகுப்பு மாணவர்…. ஆசிரியர் மீது புகார் கொடுத்த பெற்றோர்…. நடந்தது என்ன…? போலீஸ் விசாரணை….!!
SeithiSolai Tamil March 21, 2025 04:48 AM

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருவேங்கடம் அரசு பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நகம் வெட்டாமல் பள்ளிக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் உயிரியல் ஆசிரியர் கருத்தபாண்டி மாணவனை அடித்துள்ளார்.

இதனால் மாணவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த மாணவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் ஆசிரியர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.