`அந்த விளம்பரத்தில் நடித்தது தவறுதான்; ஆனால்...' -வழக்குப்பதிவு பற்றி பிரகாஷ் ராஜ் விளக்கம்
Vikatan March 21, 2025 07:48 PM

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட கேம்கள் தொடர்பான விளம்பரங்களில் நடித்ததற்காக பிரபல நடிகர்களான பிரகாஷ்ராஜ், ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 19 பேர் மீது ஹைதராபாத் காவல்துறை வழக்குப்பதிவு செய்திருக்கிறது. இந்நிலையில் இதுதொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் விளக்கம் அளித்திருக்கிறார். " 9 வருடங்களுக்கு முன் 2016-ல் ஒரு வருடம் ஒப்பந்தம் போட்டு ஆன்லைன் கேமிங் விளம்பரம் ஒன்றில் நான் நடித்தேன்.

பிரகாஷ் ராஜ்

அது தவறென சில மாதங்களில் உணர்ந்ததால், ஒரு வருடம் கழித்து 2017ல் அந்த விளம்பரத்தை நீட்டிக்க மறுத்துவிட்டேன். பின் அத்தகைய விளம்பரங்களில் நான் நடிக்கவில்லை. 2021-ல் அந்நிறுவனம் அந்த விளம்பரத்தை மீண்டும் பயன்படுத்திய போதுகூட, நான் நோட்டீஸ் அனுப்பிவிட்டேன். இளைஞர்களே... கேமிங் செயலிகளை பயன்படுத்தாதீர்கள், உங்கள் வாழ்க்கையை இழக்காதீர்கள்" என்று கூறி தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : |

Part 02: |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.