நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் மாணவி ஒருவர் படித்து வருகிறார். இந்த மாணவி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர். இந்த மாணவி படிக்கும் கல்லூரியில் ஆனந்த் ரவி என்ற 40 வயது நபர் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர். இவர் தன்னுடைய பணி காரணமாக வீரவநல்லூர் பகுதியில் வீடு எடுத்து தாங்கியுள்ளார். இந்நிலையில் ஆனந்த் ரவி சம்பவ நாளில் அந்த மாணவியை கைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைத்து சென்றுள்ளார். பின்னர் ஒரு அறையில் வைத்து அவர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் இதைப்பற்றி வெளியே சொல்லக்கூடாது என்று மாணவியை மிரட்டியுள்ளார்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து ஆனந்த் ரவியை கைது செய்தனர். அதோடு அவருக்கு உடந்தையாக இருந்த ஒரு பெண் மற்றும் டிரைவர் உள்ளிட்டோரிமும் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் சமீப காலமாக பள்ளி கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் என்பது அரங்கேறி வரும் நிலையில் தற்போது பேராசிரியரே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது