ஜனநாயகன், பராசக்தி மோதல்… எல்லாமே பக்கா பிளானா இருக்கே? விஜய்க்கு எதிராக சதியா?
CineReporters Tamil March 28, 2025 12:48 PM

jananayagan vs Parasakthi: ஜனநாயகன் படம் வரும் ஜனவரி 9, 2026ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து பராசக்தி படமும் அதே நாளில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அது விஜய் படம். சிவகார்த்திகேயனின் பராசக்தி ரெட்ஜெயண்ட் மூவீஸ் படம். அரசியலில் மட்டும் அல்ல. சினிமாவிலும் நாங்க போட்டிதான் என்கிறதா இந்த மோதல்? வாங்க பார்க்கலாம்.

ஜனநாயகன் கூட பராசக்தியையும் மோத விடுறாங்க. இப்போ மீடியாக்கள் முழுவதும் இதே பேச்சாகத்தான் இருக்கிறது. இதற்குப் பின்னாடி அரசியல் சதி இருக்கிறதா? நடப்பது என்னன்னு பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு சில கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் சொன்னது இதுதான்.

தமிழக வெற்றிக்கழகம் கட்சியைத் தொடங்கி இன்னைக்கு 2 கோடி இளைஞர்களின் கவனத்தை விஜய் திருப்பிருக்காருன்னா அது சாதாரண விஷயம் கிடையாது. தவெக படுதோல்வி அடையப் போகுதுன்னு சொல்றாங்க. அப்படியே விட்டுட்டுப் போக வேண்டியதுதானே. அப்புறம் எதுக்குக் குடைச்சல் கொடுக்குறாங்க. விஜய்க்கு எப்படி குடைச்சல் கொடுத்தாலும் அது அவருக்கு பிளஸ் பாயிண்டாகவே மாறும்.

பராசக்தி, ஜனநாயகன் கூட மோதப் போகுது. இதுல சிவகார்த்திகேயனுக்கு உடன்பாடு இருக்கான்னு தெரியல. கீழே கிடந்த துப்பாக்கியை எடுத்துத்தானே கொடுத்தாரு. அது தப்பான்னு எல்லாம் மீம்ஸ் போட்டுருந்தாங்க. அந்தக் காலத்துல மன்னர்கள் வேறொரு பொறுப்புக்குப் போகும்போது வாளையும், பொறுப்பையும் இன்னொருத்தருக்கிட்ட கொடுப்பாங்க. அதே மாதிரிதான் இதுவும்.

என்னைப் பொருத்தவரைக்கும் நடிகரை நடிகரா பாருங்க. அதுல வந்து சினிமாவைக் கலக்கக்கூடாது. ஜனநாயகன் படத்தோட ரிலீஸ்சை இவ்ளோ காலமா ஏன் தள்ளிப் போடணும்? 200 கோடி வாங்குற ஒருத்தர் அதைத் துச்சமாக மதிச்சிட்டு நான் முழுமையா அரசியல்ல இறங்கப்போறேன்னு சொன்னா அவரோட அந்தப் படம் எந்தளவு கொண்டாடப்படும்?

இந்தப் படத்துல மாநில அரசை கடுமையாக எதிர்க்கற ஒரு நாட்டை எச்.வினோத் வச்சிருக்காரு. அது ரொம்ப ரகசியமா வச்சிருக்காரு. அந்தவகையில் இது தவெகவுக்கு மிகப்பெரிய பிரச்சார படமாக இருக்கும். அதைத் தெரிஞ்சிக்கிட்டுத்தான் பராசக்தி படத்தை அதே நாள்ல மோதுறதுக்காக களம் இறக்கிருக்காங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.