விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறக்கடிக்க ஆசை சீரியலில், அருண் காதலை சீதா ஏற்றுக்கொண்டு பைக்கில் உட்கார, அதற்காக அருண் நன்றி சொல்கிறார். “எதற்கு நன்றி?” என்று கேட்க, “நீ என் காதலை ஏற்றுக்கொண்டதால்” என்று சொல்ல, “உங்கள் காதலை ஏற்றுக்கொண்டதாக நான் எப்போது சொன்னேன்? நான் சும்மா பைக்கில் உட்கார்ந்து இருக்கிறேன்” என்று ஒரு புன்சிரிப்புடன் சிரிக்கிறார். இதனால் சந்தோஷம் அடைந்த அருண் கிளம்பும் காட்சி இன்றைய எபிசோடின் ஆரம்பக் காட்சிகளில் இடம்பெற்றுள்ளது.
இதனை அடுத்து, முத்து மற்றும் மீனா இருவரும் வீட்டில் உள்ள பிரச்சனை குறித்து பேசுகிறார்கள். குறிப்பாக, பார்லர் அம்மா இவ்வளவு பொய் சொல்லி இருக்கிறார். நான் மட்டும் சொல்லாமல் இருந்தால் இன்னும் வண்டி வண்டியாய் பொய் சொல்லியிருப்பார். உண்மை ஒருநாள் வெளியே வந்தே தீரும் என்று முத்து கூற, “இருந்தாலும், நம்ம இந்த உண்மையை வீட்டில் சொல்லாமல் இருந்திருக்கலாம்” என்று மீனா கூறுகிறார்.
இதனை அடுத்து, பார்லர் அம்மா இன்னும் ஏதோ ஒரு உண்மையை மறைக்கிறார் போல் தோன்றுகிறது. “எனவே, நாம் அவருடைய ரூமில் சோதனை செய்வோமா?” என்று முத்து கேட்க, மீனா “வேண்டாம்” என்று சொல்லியும் கேட்காமல் முத்து சோதனை செய்கிறார். மீனாவும் சேர்ந்து சோதனை செய்யும்போது, சிறு பையனுக்கு எடுத்த டிரஸ்ஸை கண்டுபிடிக்கின்றனர்.
“இது அனேகமாக கிரிஷுக்கு எடுத்த டிரஸ்சாக இருக்கும்” என்று முத்து கூற, “இருக்கலாம்” என்று மீனாவும் சொல்கிறார். அப்போது மனோஜ் வந்துவிட, இருவரும் அறையை விட்டு வெளியே வந்து விடுகின்றனர்.
இந்த நிலையில், முத்து மற்றும் மீனா “ரோகிணி – மனோஜ்” குறித்து பேச, மனோஜ் அங்கு வந்து “என்னைப் பற்றி எதற்காக பேசுகிறீர்கள்?” என்று திட்டுகிறார்.
இதனை அடுத்து, மீனா மற்றும் ஸ்ருதி இடையிலான போன் உரையாடல் நடக்கிறது. “நம்ம வீட்டில் இவ்வளவு சுவாரசியமாக விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. நான் அங்கே இருந்தே தீர வேண்டும்! உடனே நாங்கள் இருவரும் வருகிறோம்” என்று ஸ்ருதி சொல்கிறார்.
இந்த நிலையில், ரோகிணி ஸ்ருதிக்கு போன் செய்து, “வீட்டில் நடந்த விஷயங்களை எல்லாம் கேள்விப்பட்டிருப்பீர்கள். என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்கிறார். அதற்கு, “இவ்வளவு பொய் சொல்லி இருக்கிறீர்களே!” என்று ஸ்ருதி பதிலளித்து, இதில் நான் சொல்வதற்கு ஒன்றும் இல்லை, நான் வெறும் ஆடியன்ஸ் தான், என்று சொல்ல அதற்கு ரோகிணி “நான் எதற்காக பொய் சொன்னேன் என்பதை என்னுடைய பார்வையில் இருந்து விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு கூட எனக்கு தரவில்லை” என்று ரோகிணி கூறுகிறார்.
“அது கரெக்ட் தானே? உங்களிடம் விளக்கம் கேட்டிருக்க வேண்டும். ஆனாலும், நீங்கள் பொய் சொன்னது ரொம்ப தப்பு. இப்ப பாட்டி வர்றாங்க. அவங்க என்ன சொல்றாங்கன்னு கேப்போம்” என்று ஸ்ருதி கூற, “பாட்டி வராங்களா?” என்று ரோகிணி அதிர்ச்சி அடைகிறார்.
“ஆமாம், எனக்கும் இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்பதற்கு ஆர்வமாக இருக்கிறது” என்று ஸ்ருதி கூற, ரோகிணி எரிச்சல் அடையும் காட்சிகளோடு இன்றைய எபிசோடு முடிகிறது.
நாளைய எபிசோடில் வழக்கம் போல, பாட்டி ரோகிணியிடம் சத்தியம் செய்ய சொல்லும் காட்சிகள் இருக்கின்றன. இருப்பினும், இந்தக் காட்சிகள் நாளை வருமா? அல்லது இன்னும் இழுத்துக் கொண்டே போகுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.