சமீப காலங்களாக தமிழகத்திலும் ரயில் விபத்துகள் அதிகரிக்க துவங்கியுள்ளன. கடந்த சில மாதங்களாகவே தாம்பரம் பகுதிகளில் தொடர்ந்து ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வப்போது மின்சார ரயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவது வழக்கத்தில் இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சென்னை தாம்பரத்தில் இருந்து தாம்பரம் சானிடோரியம் புறப்பட்டு பணிமனைக்கு சென்றுக் கொண்டிருந்த காலி சரக்கு ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
தாம்பரம்-சானடோரியம் இடையே வாகனங்களை ஏற்றிச் செல்லும் காலி சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில் பெட்டியை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே அதிகாரிகள், இது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.