சேலம் மாவட்டத்தில் உள்ள கருங்கல்லூர் தொடக்கப்பள்ளியில் ராஜா என்பவர் தலைமை ஆசிரியராக வேலை பார்க்கிறார். கடந்த 2023-ஆம் ஆண்டு ராஜா அப்பள்ளியில் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போலீசார் ராஜா மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தனர். இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ராஜா மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்தது உறுதியானது. இதனால் மாவட்ட கல்வி அலுவலர் ராஜு, ராஜாவை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.