உழைத்து சம்பாதிக்க திராணி உள்ள பெண்கள் விவாகரத்து பெரும்போது கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கோர முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் ஒருவர் ஜீவனாசம் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கூறியதாவது நன்கு படித்து முடித்து விவாகரத்து பெற்ற மனைவியைகள் தங்கள் கல்வி தகுதியை வைத்துக்கொண்டு நல்ல வேலையில் அமர்ந்து பலவற்றை சாதிக்க முடியும்.
இது போன்று கணவனிடமிருந்து கிடைக்கும் ஜீவனாம்சத்தை மட்டும் வைத்துக்கொண்டு வீட்டிற்குள் முடங்கி கிடக்க கூடாது என்று அறிவுரை வழங்கினார். அதோடு மனுதாரர் தகுதி வாய்ந்த பெண் என்பதால் அவரின் மனுவை தள்ளுபடி செய்ததாக நீதிபதி அறிவித்தார்.