காவல் நிலையத்தில் சக போலீசாருடன் சேர்ந்து சூதாடியதாக ஐந்து போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டத்தில் அமைந்துள்ள வாடி காவல் நிலையத்தில் ஆய்வாளராக திருமலேசும், உதவி சகாவல் ஆய்வாளராக முகமது மியானும் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், முகமது மியான், அதே காவல் நிலையத்தில் பணியாற்றும் சக போலீஸ்காரர்களுடன் சேர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ, புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து காவல் நிலையத்தில் வைத்து சூதாடியதாக உதவி சப்-இன்ஸ்பெக்டர் முகமது மியான், ஏட்டுகள் நாகராஜ், சாய் பண்ணா, போலீஸ்காரர்கள் இம்ரான், நாகபூஷண் ஆகிய ஐந்து பேரையும் பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு அட்டூரு சீனிவாசலு அதிரடி உத்தரவிட்டுள்ளார்.