கடலூரில் பரபரப்பு - பேருந்தில் இருந்து தவறி விழுந்து கல்லூரி மாணவி படுகாயம்.!
Seithipunal Tamil March 28, 2025 04:48 AM

கடலூர் மாவட்டத்தில் அரசுப் பேருந்தில் இருந்து இறங்கும்போது தவறி விழுந்த கல்லூரி மாணவி காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து மாணவியிடம் விசாரித்ததில், ஓட்டுநர் பேருந்தை நிறுத்துவது போல் சென்று, திடீரென எடுத்ததால் கீழே விழுந்து விட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காயமடைந்த மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

பேருந்தில் இருந்து தவறி விழுந்து மாணவி படுகாயமடைந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் பள்ளி மனைவி ஒருவர் பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.