திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த சத்தம் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி , கூத்தாநல்லூர் வடுவூர், நீடாமங்கலம் கமலாபுரம் திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகள் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் திடீரென ஒரு பலத்த சத்தம் கேட்டுள்ளது. இதில் வீடுகள் மற்றும் ஜன்னல்களில் அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் நில அதிர்வு குறித்து மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் அறிக்கையின் மூலம் விளக்கம் அளித்துள்ளார். அதில், தஞ்சாவூர் விமான தளத்திலிருந்து, போர் விமானங்கள் ஆறுமாதம் ஒருமுறை சூப்பர் சோனி பூம் எனப்படும் ஒலி வேகத்தை தொடும் பயிற்சி மேற்கொள்ளப்படும். அப்போது விமானத்தில் இருந்து வெளியாகும் வாய்வு காரணமாக இந்த மிகப்பெரிய சத்தம் ஏற்படும் இந்த சத்தத்தினால் அதிர்வுகள் ஏற்பட்டுள்ளது என்று ஆட்சியர் மோகனச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். இதனால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.