அதிர்ச்சி... கல்லூரி மாணவிகள் விடுதியில் கொட்டிக்கிடக்கும் சிகரெட், காண்டம்ஸ், மது பாட்டில்கள்!
Dinamaalai March 21, 2025 11:48 AM

நாடு முழுவதும் சமீப காலங்களாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு அதிகரித்து வரும் போதைப் பொருட்களின் புழக்கமும், பழக்கமுமே காரணம் என்று கூறப்பட்டு வரும் நிலையில், பல்கலைக்கழகத்தின் மாணவிகள் விடுதியில் ஏராளமான சிகரெட் பாக்கெட்டுகளும், மதுபாட்டில்களும், காண்டம்ஸ் பாக்கெட்டுகளாக சிக்கியது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகம் ஏற்கெனவே இது போன்ற சர்ச்சைகளில் சிக்கியிருந்த நிலையில் தற்போது மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதற்கு முன்பு போதைப்பொருள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து இந்த பல்கலைக்கழகத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

தற்போது மாணவிகள் தங்கும் விடுதியில் மது பொருட்கள் இருப்பது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விடுதியில் நடக்கும் விவகாரங்கள் குறித்து ஒரு மாணவி புகார் அளித்துள்ளார்.  

ஆனால் விடுதியில் வார்டன் அந்த மாணவி கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் இது குறித்து எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்றும், புகார் கூறிய அந்த மாணவியின் நிறத்தை வைத்து கேலி செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. 

விடுதியில் நடக்கும் குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி மாணவி பதிவாளர் மற்றும் துணை வேந்தரிடம் பலமுறை முறையிட்டுள்ளனர். அப்போது சம்பந்தப்பட்ட மாணவிகள் இறுதி ஆண்டு கல்வியில் இருப்பதால் அவர்களுக்கு தண்டனை வழங்க முடியாது என நிர்வாகம் கூறியதாக அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.