பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத், சித்தா படங்களின் இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் - சீயான் விக்ரம் காம்போவில் உருவாகியிருக்கும் `வீர தீர சூரன் - பாகம் 2' திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அருண்குமார், விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
மேடையில் பேசிய ஜி.வி. பிரகாஷ்குமார், ``நானும் சியானும் சேர்ந்து பண்ற நான்காவது படம் இது. இந்த நான்கு படங்களுமே அவருக்கு ரொம்பவே சவலானது. ஒரு இசையாமப்பாளராக எனக்கு சவால் கொடுக்கக்கூடிய நடிகர் அவர். அருண் குமார் நல்ல ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டர். இந்தப் படம் டார்க் ஆன படம். அசுரன் ஜோன்ல இந்த படத்துக்கு பின்னணி இசையமைச்சிருக்கேன். ஒவ்வொரு பின்னணி இசையும் 3 முதல் நான்கு நிமிடங்களுக்கு இருக்கும்.
'கேங்ஸ் ஆஃப் வாசிப்பூர்' படத்துக்கு அப்படியான இசையிமைச்சிருந்தேன். அதுக்குப் பிறகு இந்த படத்துக்கு அது மாதிரி வேலை பார்த்திருக்கேன். பாகம் 2 மேட்டரை நான் டீசர்லதான் பார்த்தேன். அருண் கதை சொல்லும்போது அந்த விஷயத்தை சொல்லல. என்ன பாகம் 2 போட்டிருக்கு, முதல் பாகம் யார் பண்ணாங்கன்னு நான் யோசிச்சேன். நானும் முதல் பாகத்துக்கு வெயிட்டிங்." என்று கூறினார்.
Vikatan WhatsApp Channelஇணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK