Veera Dheera Sooran: "அன்பே சீயான்... பொங்கல்ல போடுவாங்க வெல்லம், நீதான் என்..." - துஷாரா விஜயன்
Vikatan March 21, 2025 03:48 PM

இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கத்தில், சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகியிருக்கும் `வீர தீர சூரன் - பாகம் 2' திரைப்படம் மார்ச் 27-ம் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தில், எஸ்.ஜே. சூர்யா, மலையாள நடிகர் சுராஜ், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

வீர தீர சூரன் இசைவெளியீட்டு விழா

இந்த நிலையில், வீர தீர சூரன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், அருண்குமார், விக்ரம், எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன், ஜி.வி. பிரகாஷ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய துஷாரா விஜயன், ``இந்த படம் என்னுடைய கரியர் கிராப்ல முக்கியமான படமாக இருக்கும். எத்தனை நடிகர்களுக்கு இது போன்ற அற்புதமான டீம் கூட வேலை பார்க்கிறதுக்கு வாய்ப்பு கிடைக்கும்னு தெரில. எல்லோரும் சியானுக்கு ஒரு ஓ போடுங்க! சின்ன வயசுல இருந்து விக்ரம் சார் படங்கள் பார்த்து இன்ஸ்பயர் ஆகியிருக்கேன்.

துஷாரா விஜயன்

ஒவ்வொரு இடத்திலயும் வேற மாதிரி தெரியுறதுக்கு அபரிமிதமான அர்ப்பணிப்போடா உழைப்பாரு. இந்தப் படம் எனக்கு ஒரு முக்கியமான மேடை. ஜி.வி 'கள்ளூரும்' பாடல் போட்டு கொடுத்திருக்காரு. அது எனக்கு லைஃப்டைம் காதல் பாடலாக அமைஞ்சிருக்கு. எஸ்.ஜே.சூர்யா சாரும் நானும் ரெண்டு படம் சேர்ந்து நடிச்சிருக்கோம். அது இன்னும் 10,15 னு போகணும்" என துஷாரா பேசிக் கொண்டிருகையில் விக்ரம் தொழில்நுட்ப கலைஞர்களையும் அடையாளப்படுத்தி பேசுமாறு கைக்காட்ட, அவர்களைப் பற்றியும் துஷாரா குறிப்பிட்டு பேசினார்.

விக்ரம்

இறுதியில், ``இந்த படத்தோட செட் எனக்கு வீடு மாதிரி இருந்தது. இந்த கலைவாணி சியானுக்கு ஒரு கவிதை சொல்றேன். அன்பே சீயான், பொங்கல்ல போடுவாங்க வெல்லம், நீதான் என் செல்லம். தோசைல ஊத்துவாங்க நெய், என்கிட்ட சொல்லாத உன் பொய். பாயசத்துல போடுவாங்க சேமியா, என்கிட்ட உன் லவ்வை கொஞ்சம் காமியா" என்று கலகலப்பாக பேசினார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : |

Part 02: |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.