பெங்களூருவில் வசித்து வரும் சதீஷ் என்பவர் விதவிதமான நாய்களை வாங்கி வளர்த்து வருகிறார். நாய்கள் மீது அதிக பிரியம் கொண்ட சதீஷ் 50 கோடி ரூபாய் கொடுத்து நாய் ஒன்றை வாங்கி உள்ளார்.அந்த வகையில் அரிய வகை ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் கலப்பு இன நாயை சமீபத்தில் வாங்கி உள்ளார். கடபாம்ப் ஒகாமி என்ற இந்த நாய் உலகிலேயே விலை உயர்ந்த நாய்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த நாயை அமெரிக்காவில் இருந்து இடைத்தரகர் மூலமாக சதீஷ் வாங்கி உள்ளார். 4 வயதே ஆகும் இந்த நாய், 75 கிலோ எடை உள்ளது.
ஒகாமியின் தாய் இனங்களில் ஒன்றான காகசியன் ஷெப்பர்ட் நாய்கள், அவற்றின் வலிமை மற்றும் பாதுகாப்பு உள்ளுணர்விற்கு பெயர் பெற்றவை. இந்த நாய்கள் ஜார்ஜியா, ஆர்மீனியா, அஜர்பைஜான் மற்றும் ரஷ்யாவின் சில பகுதிகள் போன்ற குளிர் பிரதேசங்களில் வசித்து வருபவை. ஓநாய்களிடமிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க அவை பெரும்பாலும் காவல் நாய்களாகப் பயன்படுத்தப்படுகின்றன.
கர்நாடகா முழுவதும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளில் சதீஷ் ஒகாமியை அழைத்து சென்று வருகிறார். தனது நாய்கள் பெரும் கூட்டத்தை ஈர்த்து வருவதாகவும் அதனுடன் செல்ஃபி எடுக்க மக்கள் ஆர்வமாக இருப்பதாகவும் சதீஷ் கூறியுள்ளார். அவரது அனைத்து நாய்களும் ஏழு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள கடபோம்ஸ் கென்னல்ஸில் வளர்க்கப்பட்டு வருகின்றன