திரைப்படத் துறையில் நடிகர், நடிகைகள் அல்லது இயக்குனர்கள் பலரும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் அந்தக் காதல் கல்யாணம் நீண்ட நாட்களுக்கு நீடிப்பதில்லை. சில திருமணங்கள் உடனே முடிவுக்கு வந்து விடுகின்றன. இதேபோன்று நடிகரும், இயக்குனருமான ஆர் .பார்த்திபன் தான் இயக்கி நடித்த “புதிய பாதை”என்ற திரைப்படத்தை தொடர்ந்து நடிகை சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. மேலும் ஒரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 2001 ஆம் ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். இதன் பின் நடிகை சீதா வேறு திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணமும் கடந்த 2016 ஆம் ஆண்டு மீண்டும் விவாகரத்தானது. இந்நிலையில் நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தன்னுடைய முன்னாள் மனைவி குறித்து பேசி உள்ளார்.
இதில் அவர் கூறியதாவது,”நான் இன்னும் வாடகை வீட்டில் தான் இருக்கிறேன். சீதாவுக்கு பிறகு யாரையும் என் மனைவியாக ஏற்க முடியவில்லை என்பதால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரைப் பிரிந்த பின் அவரது தாயார் இறப்பின் போதே அவரை கடைசியாக சந்தித்தேன். இந்த வேகமான உலகில் உறவுகள் நிலையற்றதாக இருப்பதால், அதனுடன் பயணிக்காமல் அதற்கு பதிலாக நினைவுகளுடன் பயணிக்க தொடங்கி விட்டேன். இதுவும் ஒருவிதமான காதலின் வடிவம்”என உருக்கமாக தனது காதலை பதிவு செய்திருந்தார். மறுமணம் குறித்து இயக்குனர் பார்த்திபன் கூறியது ரசிகர்கள் மத்தியில் மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.