இந்த தொடக்க விழாவில் பாலிவுட் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொள்கிறார்கள். கடந்த 17-வது சீசனின் தொடக்க விழாவில் டைகர் ஷெராப், ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் ஸ்டேடியத்தில் கலக்கியது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இந்த சீசனில் பாலிவுட் பிரபலங்கள் கலக்க இருக்கின்றனர். நடிகை ஸ்ரத்தா கபூர், நடிகர் வருண் தவான், பாடகர் அரிஜித் சிங், திஷா பதானி மற்றும் ஸ்ரேயா கோஷல் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் போட்டிகள் நடைபெறும் 13 இடங்களிலும் நிகழ்ச்சியை நடத்த பி.சி.சி.ஐ திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று 22ம் தேதி கொல்கத்தாவில் நடக்கும் தொடக்க விழா கொண்டாட்டத்தில் இந்தி நடிகை திஷா படானி மற்றும் பாடகி ஷ்ரேயா கோஷால் பங்கேற்க உள்ளனர். சென்னையில் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொள்கிறார். பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.