நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்.. இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை..!
Newstm Tamil March 22, 2025 06:48 PM

பொருளாதாரத்தில் அசாதாரண சூழல்கள் நிலவுவதால், தங்கத்தை அனைவரும் பாதுகாப்பான முதலீடாகக் கருதி வாங்குகின்றனர். இதனால் தேவை அதிகரித்து தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இது சாமானிய மக்களை அதிகம் பாதித்து வருகிறது.

நேற்று (மார்ச் 21) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.8270-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.66,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தங்கம் விலை இன்றும் குறைந்துள்ளது. இன்று (மார்ச் 22) தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.8230-க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து ஒரு சவரன் ரூ.65,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 10 நாட்களில் தங்கம் விலை!

22/மார்ச்/2025 - ரூ. 65,840

21/மார்ச்/2025 - ரூ. 66,160

20/மார்ச்/2025 - ரூ. 66,480

19/மார்ச்/2025 - ரூ. 66,320

18/மார்ச்/2025 - ரூ. 66,000

17/மார்ச்/2025 - ரூ. 65,680

16/மார்ச்/2025 - ரூ. 65,760

15/மார்ச்/2025 - ரூ. 65,760

14/மார்ச்/2025 - ரூ. 65,840

13/மார்ச்/2025 - ரூ. 64,960

இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 112-க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் 1 கிலோ வெள்ளி 1,12,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.110-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,12,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.