மகாத்மா காந்தி மற்றும் ஜவஹர்லால் நேருவைப் பற்றிய சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்ட ஹிந்துத் தலைவரான யதி நர்சிங்கானந்த் கிரி மீதான விமர்சனங்கள் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதாவது மார்ச் 21 ஆம் தேதி இரவில் வெளியான ஒரு வீடியோவில், “நான் காந்தியை தேசத்தின் தந்தையாக ஏற்கவில்லை. காந்தி மற்றும் நேரு மனித இனத்தின் மிகப்பெரிய துரோகிகள்” என அவர் கூறியுள்ளார். இது சமூக வலைதளங்களில் பரவியதுடன், பல்வேறு தரப்பினரிடமும் கடும் கண்டனத்தை சந்தித்துள்ளது. மேலும், இந்த இருவரால் இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள இந்துக்களுக்கு தங்கள் சொந்த நிலம் இல்லாமல் போய்விட்டது எனவும் அவர் விமர்சித்துள்ளார்.
இந்த சர்ச்சைக்குப் பிறகு, உத்தரப் பிரதேசத்தின் காசியாபாத் போலீசார், யதி நர்சிங்கானந்த் மீது தேசிய ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையில் கட்சி பேச்சு மற்றும் மதவாதத்தைத் தூண்டும் வகையிலான பிரிவுகளின் கீழ் FIR பதிவு செய்துள்ளனர். ஆனால், வழக்குப் பதிந்த பிறகும் அவருடைய சச்சர்வு பேச்சுகள் தொடர்ந்துள்ளன. அந்த வீடியோவில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து கடுமையான விமர்சனங்களையும் அவர் தெரிவித்துள்ளதுடன், இந்த வீடியோ தற்போது வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் புதிய அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. இந்த வழக்கில் மாநில நிர்வாகம் எவ்வாறு நடவடிக்கை எடுக்கும் என்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.