சுந்தர்.சி-யை தொடர்ந்து சூடாக்கும் நயன்தாரா!.. இப்படியே போனா வேற ஹீரோயின்தான்!….
CineReporters Tamil March 25, 2025 12:48 AM

Nayanthara: தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக இருப்பவர் சுந்தர்.சி. 30 வருடங்களுக்கும் மேல் திரைப்படங்களை இயக்கி வருகிறார். எவ்வளவு நாள் படப்பிடிப்பு.. எவ்வளவு பட்ஜெட் என தயாரிப்பாளரிடம் சொன்னாரே அப்படியே படத்தை எடுத்து கொடுப்பார் சுந்தர்.சி. இதனால்தான் அவரை வைத்து படமெடுக்க பல தயாரிப்பாளர்களும் ஆசைப்படுவார்கள்.

இவர் 12 வருடங்களுக்கு முன்பு இயக்கிய மதகஜ ராஜா படமே பொங்கலுக்கு வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை அள்ளியது என்றால் அதுவே சுந்தர்.சியின் தனித்திறமையாக இருக்கிறது. இப்போது ஐசரி கணேஷ் தயாரிப்பில் சுந்தர்.சி இயக்க மூக்குத்தி அம்மன் 2 படம் உருவாகி வருகிறது.

#image_title

முதல் பாகத்தில் அம்மனாக நடித்த நயன்தாராவே இந்த படத்திலும் நடிக்கிறார். இந்த படத்தின் பூஜை சில நாட்களுக்கு முன்பு நடந்தது. பொதுவாக நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் பூஜை மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளமாட்டார். ஆனால், அதிக சம்பளம் கொடுத்தார்களோ என்னவோ தெரியவில்லை. இந்த பட விழாவில் மட்டும் கலந்துகொண்டார். வந்தவுடன் பூஜைக்கு வராமல் கேரவானில் அமர்ந்துகொண்டார். எல்லோரும் அவருக்காக காத்திருந்தபோது யாருமில்லா கடையில் டீ ஆத்துவது போல கூட்டமே இல்லாத இடத்தில் 10 ஜிம் பாய்ஸுடன் எண்ட்ரி கொடுத்து பில்டப் காட்டினார்.

அது கூட பரவாயில்லை. இப்போது படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் அட்ராசிட்டியை துவங்கிவிட்டாராம். ஒரு காட்சியில் உதவி இயக்குனர் கொடுத்த ஆடையை போட மாட்டேன் என அடம்பிடித்திருக்கிறார். ‘இதுதான் டிரெஸ்.. போடுங்க’ என சுந்தர் சி சொன்ன பின் அந்த உடையை போட்டிருக்கிறார். இரண்டு முறை அப்படி நடந்திருக்கிறது. அப்போது அந்த உதவி இயக்குனரை நயன் திட்டியதாக சொல்லப்படுகிறது.

#image_title

இதனால் அந்த உதவி இயக்குனர் கோபித்துகொண்டு அங்கிருந்து போய்விட்டதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம், சுந்தர்.சி தனது படங்களின் சில காட்சிகளை பொள்ளாச்சி பக்கம் எடுப்பார். ஏனெனில் அங்கு பசுமையான இடங்கள் இருக்கும். ஆனால், சென்னையை தவிர வேறு எங்கு படப்பிடிப்பு நடத்தினாலும் நான் வர மாட்டேன் என்கிறாராம் நயன்தாரா.

இப்படி தொடர்ந்து நயன் குடைச்சல் கொடுத்தால் அவரை தூக்கிவிட்டு வேறு ஒரு நடிகையை வைத்து எடுக்கலாம் என்கிற முடிவுக்கும் சுந்தர்.சி வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் ‘அவங்க அப்படித்தான்.. கொஞ்சம் அட்ஜஸ் பண்ணி படத்தை முடிங்க’ என ஐசரி கணேஷ் கூறுவதால் பல்லை கடித்துக்கொண்டு படத்தை இயக்கி வருகிறாராம் சுந்தர்.சி. ஆனால், அவரின் பொறுமையும் ஒரு எல்லை வர மட்டுமே என்கிற படக்குழு!..

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.