நள்ளிரவில் அதிர்ச்சி…! தமிழக மீனவர்கள் 11 பேர் கைது… தொடரும் அட்டூழியம்…!!
SeithiSolai Tamil March 27, 2025 02:48 PM

எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக குற்றம் சாட்டி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்கதை ஆக்கிவிட்டது. இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதியும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. மீனவர்களை தொடர்ந்து கைது செய்வதோடு அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்து இலங்கை கடற்படை அட்டூழியம் செய்கிறது.

அந்த வகையில் நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 11 பேரை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம் சாட்டி கைது செய்துள்ளது. அதோடு ஒரு படகு, வலைகள் மற்றும் மீன்கள் போன்றவற்றையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கடந்த சில மாதங்களாகவே இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்யும் சம்பவங்கள் அதிகரித்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.