ஒரே காரில் ஜிவி மற்றும் சைந்தவி!!! விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில்...!!!
Seithipunal Tamil March 25, 2025 12:48 AM

பிரபல இசையமைப்பாளராகவும், நடிகராகவும் தமிழ் சினிமாவில்  வளம் வருபவர் ஜி.வி. பிரகாஷ் குமார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு தனது பள்ளித் தோழியும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகியுமான சைந்தவியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்த பிரபல தம்பதிக்கு ஆன்வி என்ற பெண் குழந்தை உள்ளது.இந்நிலையில், ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகியோர் பிரிந்து வாழ முடிவு எடுத்து இருப்பதாக கடந்தாண்டு மே மாதம் அறிவிப்பு வெளியிட்டனர்.

இதைத்தொடர்ந்து , ஜி.வி.பிரகாஷ் குமார், சைந்தவி இருவரும் பரஸ்பரமாக பிரிவதாக விவாகரத்து கோரி சென்னை முதலாவது கூடுதல் குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி செல்வ சுந்தரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜி.வி.பிரகாஷ், சைந்தவி இருவரும் நேரில் ஆஜராகி இருவரும் மனமுவந்து பிரிவதாக தெரிவித்தனர்.

இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்ட பின்பு இருவரும் ஒரே காரில் புறப்பட்டு சென்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.