தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கும் மலிவு விலையில் பருப்பு, சீனி, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் மலிவு விலையிலும், இலவசமாக அரிசியும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் இந்த பொருட்களையெல்லாம் பெறுவதற்கு குடும்ப அட்டைதாரரின் வருமானத்தைப் பொறுத்து அவர்களுடைய குடும்ப அட்டைகள் 5 வகைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன. தமிழகத்தில் மொத்தம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34,793 நியாய விலைக் கடைகள் மூலமாக அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு தரப்பு மக்களுக்கு இது உதவும் விதமாக அமைந்துள்ளது.
அதற்கு ரேஷன் கார்டு மிகவும் முக்கியம். ஸ்மார்ட் ரேஷன் கார்டில் முகவரியை ஆன்லைன் மூலமாக மாற்றலாம். இதற்கு முதலில் அரசின் அதிகாரப்பூர்வ வலைதளமான https://tnpds.gov.in/ பகுதிக்கு செல்லவும். பதிவு செய்யப்பட்ட செல்போன் எண், PASWORD பயன்படுத்தி உள்ளே நுழையவும். கடவுச்சொல் மறந்துவிட்டால் அதை மீட்டெடுக்கும் வசதியும் இதில் இருக்கிறது. வலைதளத்தில் உள்ள மின்னணு அட்டை தொடர்பான சேவைகள் என்பதை தேர்ந்தெடுத்து அதில் “உறுப்பினர் சேர்க்க” என்பதை கிளிக் செய்யவும். புதிய உறுப்பினர் பெயர் , பாலினம், பிறந்த தேதி, குடும்ப தலைவரோட உறவு, ஆதார் போன்ற விவரங்களை உள்ளிட்டு “உறுப்பினர் சேர்” என்பதை CLICK செய்ய வேண்டும்.