பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் சர்பராஸ் அகமது உடன் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக் மனைவி சனா ஜாவேத் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில் சப்ராஸிடம் யாரோ உங்களை காயப்படுத்தியது போல் பேசுகிறீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு சப்ராஸ், “நான் விளையாட வேண்டிய இடத்தில் விளையாடுவேன்” என்று கூற அதற்கு மீண்டும் பதில் அளித்த சனா, “நான் என் கணவருடன் எப்படி வேண்டுமானாலும் விளையாட முடியும்” என்று கூறினார்.
அவருடைய இந்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இணையவாசிகள் அவருக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். சனாவும். மாலிக்கும் கடந்த வருடம் ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார்கள். மாலிக் டென்னிஸ் வீரர் சோனியாவை திருமணம் செய்து கொண்டு அவரை விவகாரத்து செய்திருந்தார். தற்போது சனாவும் தன்னுடைய முன்னாள் கணவர் உமர் ஜஸ்வாலிடமிருந்து விவகாரத்தை பெற்றதாகவும் கூறப்படுகிறது.