Noor Ahmad: `மஹி பாய் போன்ற ஒருவர் ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது.!' - முதல்போட்டி குறித்து நூர் அகமது
Vikatan March 24, 2025 10:48 PM

ஐபிஎல் வரலாற்றில் எப்போதும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய போட்டியாக விளங்கும் சென்னை (CSK) vs மும்பை (MI) போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில், முதலில் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் அடித்தது. அதையடுத்து களமிறங்கிய சென்னை அணி, ஒப்பனர் ரச்சின் ரவீந்திரா, ஒன்டவுன் ருத்துராஜ் கெய்க்வாடின் அரைசதங்களால் கடைசி ஓவரின் முதல் பந்தில் 158 ரன்கள் எட்டி வெற்றிபெற்றது.

தோனி - சூர்யகுமார் யாதவ்

இப்போட்டியில், முதல் இன்னிங்ஸில் சென்னை சார்பில் 4 ஓவர்கள் பந்துவீசி 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து , ராபின் மின்ஸ், திலக் வர்மா, நமன் திர் ஆகியோரின் விக்கெட்டுகளை அள்ளிய நூர் அஹமது ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக, இவரின் பந்துவீச்சில் சூர்யகுமார் யாதவை தோனி எப்போதும் போல மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்தார்.

மெகா ஏலத்தின்போது பெரும் தொகையாக ரூ.10 கோடிக்கு தன்னை எடுத்த சென்னை அணியின் நம்பிக்கையை நூர் அகமது தனது முதல் போட்டியிலேயே சிறப்பான ஆட்டத்தின் மூலம் ஆட்டநாயகன் விருதையும் வென்று காப்பாற்றியிருக்கிறார்.

`மஹி பாய் போன்ற ஒருவர்..!'

சி.எஸ்.கே-வில் முதல் போட்டி குறித்து பேசிய நூர் அஹமது, “ஐபிஎல் போட்டிகளில் இங்கு விளையாடுவது எனக்கு மிகவும் ஸ்பெஷல். சிஎஸ்கே அணிக்காக என்னுடைய பங்களிப்பை கொடுப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

நூர் அஹமது

சரியான இடத்தில் பந்தை டெலிவரி செய்வது மட்டுமே என்னுடைய நோக்கமாக இருந்தது. அதனால்தான் இப்படி என்னால் விளையாட முடிந்தது. சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்தியது எனக்கு ஸ்பெஷல். மஹி பாய் போன்ற ஒருவர் ஸ்டம்புக்கு பின்னால் நிற்பது எனக்கு மிகப்பெரிய சப்போர்ட்" என்று கூறினார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.