கனிம வளங்கள் வெட்டப்படுவது தொடர்பாக அமைச்சர் துரை முருகன் சட்டப்பேரவையில் பேசியதாவது, அண்டை மாநிலங்களுக்கு கனிமவளம் கொண்டு செல்வது, இப்போதுதான் நடப்பது போல காட்டப்படுகிறது. அதிமுக ஆட்சியிலும் விற்பனை செய்யப்பட்டன. கனிமங்களை எடுக்கக் கூடாது என ஒருவர் வழக்குபோட்டார். சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதால் தடை செய்ய முடியாது என நீதிமன்றம் கூறிவிட்டது.
அனுமதியின்றி கனிம வளங்கள் கொண்டு சென்றதாக கடந்த 4 ஆண்டுகளில் 21,161 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன ட்ரோன்கள் மூலம் குவாரிகளில் ஆய்வு நடத்தி, அனுமதிக்கப்பட்ட அளவை விட வெட்டி எடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகளால், அரசின் டாமின் நிறுவனம் லாபத்தை ஈட்டியுள்ளது என கூறியுள்ளார்.