“இரவில் திக் திக் நிமிடங்கள்”.. பேருந்து ஓட்டுனரால் அச்சத்தில் பயணிகள்… உங்கள நம்புனா இப்படியா பண்ணுவீங்க…? அதிரடி காட்டிய போக்குவரத்து கழகம்…!!!
SeithiSolai Tamil March 23, 2025 01:48 PM

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு கரூருக்கு ஒரு அரசு பேருந்து சென்றது. இந்த பேருந்து திருச்சியை கடந்த நிலையில் திடீரென ஓட்டுனர் செல்போனில் வீடியோ பார்த்தபடியே பேருந்தை ஓட்ட ஆரம்பித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தது.

அதாவது அந்த பேருந்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 25-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில் செல்போனை பார்த்தபடி பேருந்தை ஓட்டாதீர்கள் என சில பயணிகள் அவரிடம் கூறியுள்ளனர். இதனால் சிறிது நேரம் அவர் செல்போனை ஆப் செய்து வைத்த நிலையில் மீண்டும் செல்போன் பார்த்தபடி பேருந்தை ஓட்ட ஆரம்பித்தார். இதனால் பேருந்தில் சென்ற பயணிகள் மிகவும் அச்சத்துடனே பயணம் செய்தனர். இது தொடர்பாக கரூர் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில் சம்பந்தப்பட்ட ஓட்டுநர் சரவணன் என்பது தெரிய வந்தது. மேலும் தற்போது அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.