ஐபிஎல்-ன் 18 வது சீசன் நாளை நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய இரண்டு அணிகள் மோதுகின்றது. இதை தொடர்ந்து நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றது. இந்நிலையில் இந்த போட்டியை காண வருபவர்கள் ஸ்பான்சர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் திருப்பத்துள்ளது.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு மிகஅருகில் உள்ள சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் வருகின்ற மார்ச் 23, 2025 ஆம் தேதி நடைபெறஉள்ள “IPL 2025” கிரிக்கெட் போட்டியை காணவரும் ரசிகர்களுக்கு தடையற்ற மெட்ரோ பயணத்தைவழங்க ஸ்பான்சர் செய்ய முன்வந்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் நிறுவனத்துடன் இணைந்துசெயல்படுவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறது.
ஸ்பான்சர் செய்யப்பட்ட IPL போட்டிகான பயணச்சீட்டு வைத்திருப்பவர்கள் பயணச்சீட்டுகளில்(both Digital & Physical) உள்ள தனித்துவமான QR குறியீட்டை தானியங்கி நுழைவு இயந்திரத்தில்ஸ்கேன் செய்து மெட்ரோவில் பயணிக்கலாம். இந்த சிறப்பு சலுகை ஒரு சுற்றுப் பயணத்திற்கு (2 நுழைவுமற்றும் 2 வெளியேறுதல்) பயன்படுத்தலாம். எந்த மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்தும் போட்டிநடைபெறும் மைதானத்திற்கு அருகிலுள்ள அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திற்கு இடையேமெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணிக்கலாம்.
அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து கடைசி மெட்ரோ இரயில் நள்ளிரவு 1மணிக்கு விம்கோ நகர் பணிமனை மற்றும் விமான நிலையம் மெட்ரோ நோக்கி புறப்படும். பயணிகள் கடைசிமெட்ரோ இரயில் புறப்படுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னதாகவே அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில்நிலையத்திற்குள் வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பச்சை வழித்தடத்தில் உள்ள மெட்ரோ இரயில்நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி. இராமச்சந்திரன் சென்ட்ரல்மெட்ரோ இரயில் நிலையத்தில் (நடைமேடைகள் 1 & 2) வழித்தடம் மாற்றம் செய்து கொள்ளலாம். IPL 2025 போட்டியை காண செல்பவர்கள் மேற்குறிப்பிட்டுள்ள இந்த வசதிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.