இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் குஜராத் சாணிக்கையாக விளையாடுகிறார் . அதேபோல பிக்பால் விளையாட்டு மூலமாக பிரபலமானவர் நடிகை மஹிரா சர்மா. இந்த நிலையில் இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக அப்போது வதந்திகள் பரவி வந்த நிலையில் இருவரும் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்கள். இது குறித்து மஹிரா தன்னுடைய இன்ஸ்டா பதிவில் வதந்திகளை பரவுவதை நிறுத்துங்கள். நான் யாரிடமும் டேட்டிங் செய்யவில்லை என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக முஹம்மது சிராஜும் தன்னுடைய இன்ஸ்டா பதிவில், என்னை சுற்றி கேள்விகள் கேட்பது நிறுத்துங்கள். இது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஆதாரம் அற்றது. இது முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்திருந்தார். அதாவது இவர்கள் இருவர் குறித்தும் டேட்டிங் வதந்தி கிளம்பியதை அடுத்து இருவரும் ஒருவரை ஒருவர் பின் தொடர தொடங்கினார்கள். இதன் காரணமாகத்தான் காதல் பற்றிய தவறான பரவலுக்கு ஊடகங்களுக்கு வழி வகுத்தது என்று சொல்லலாம்.