மக்களே கவனம்..! இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றம்..!
Newstm Tamil March 23, 2025 12:48 PM

இன்று சென்னையில் போக்குவரத்து மாற்றங்களை சென்னை மாநகரப் போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 23 மற்றும் 28, ஏப்ரல் 5, 11, 25 மற்றும் 30 ஆகிய ஏழு நாட்கள் இந்த போக்குவரத்து மாற்றம் இருக்கும்.

போட்டி நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மாற்றுப்பாதைகள் அமலில் இருக்கும். அதன்படி, கார் பாஸ் வைத்திருப்பவர்கள் தங்கள் வாகனங்களை தங்கள் பாஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ள நியமிக்கப்பட்ட பகுதிகளில் நிறுத்த அனுமதிக்கப்படுவார்கள்.


கார் பாஸ் இல்லாதவர்கள், பார்வையாளர்கள் ஆர்.கே.சாலைக்கு கதீட்ரல் சாலை வழியாக காமராஜர் சாலையை (மெரினா கடற்கரை சாலை) அடைந்து, மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை பார்க்கிங்கில் தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, பின்னர் சுரங்கப்பாதைகள் வழியாக மைதானத்தை அடைய நடந்து செல்ல வேண்டும்.

டாக்சிகள், ஆட்டோ ரிக்ஷாக்கள் அண்ணா சாலையைப் பயன்படுத்தி வாலாஜா சாலையை அடைந்து மைதானம் அருகே இறக்கிவிட்டு, பின்னர் சிவானந்தா சாலைக்குச் சென்று பார்க்கிங் செய்யலாம்.

வாலாஜா சாலையில் மினி பேருந்து / மாநகர போக்குவரத்துக் கழகம் / சிறப்பு பேருந்துகள் அனுமதிக்கப்படாது. சுவாமி சிவானந்தா சாலையில் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்க அனுமதிக்கப்படுவார்கள். பொதுமக்கள் பிரஸ் கிளப் சாலை வழியாக மைதானத்திற்கு நடந்து செல்லலாம்.

பாரதி சாலை வழியாக மட்டுமே விக்டோரியா விடுதி சாலைக்குச் செல்ல முடியும். வாலாஜா சாலையிலிருந்து விக்டோரியா விடுதி சாலையை அடைய முடியாது. பெல்ஸ் சாலை ஒரு வழிப் பாதையாக மாறிவிடும். ரத்னா கஃபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் பெல்ஸ் சாலை - வாலாஜா சாலை வழியாக திருப்பிவிடப்படும்.

ரயிலில் செல்லும் பொதுமக்கள் சேப்பாக்கம் ரயில் நிலையம் அல்லது அரசு எஸ்டேட் மெட்ரோ நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.