அதிரடி அறிவிப்பு!!! வீடு தேடி வரும் 'ஸ்வீட்'- பெண் குழந்தைகளுக்காக தெலுங்கானா கலெக்டர்....!!!
Seithipunal Tamil March 24, 2025 10:48 PM

முசம்மில் கான் என்பவர், தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் கலெக்டராக இருப்பவர் . மேலும் கம்மம் மாவட்டத்திலுள்ள வீட்டில் பெண் குழந்தைப் பிறந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும் என்ற உணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் பெண் பிறப்பு சதவிகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் பெண் பெருமை என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

பெண் குழந்தைகள் பிறந்தால் வீட்டிற்குச் சென்று வாழ்த்து தெரிவித்து 'சுவீட் பாக்ஸ்' வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஏற்கனவே கலெக்டர் முசம்மில் கான் பெண்களின் மேம்பாட்டிற்காக மாவட்டத்தில் 19 டீ கடை மற்றும் உணவகங்களைத் தொடங்கி வைத்துள்ளார்.

மேலும் திருநங்கைகளின் மேம்பாட்டிற்காகச் சுய உதவி குழுக்களை ஆரம்பித்துக் கடன் உதவி வழங்கி வருகிறார்.அதுமட்டுமின்றி கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகளைப் பராமரிப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பகல் நேர பராமரிப்பு மையத்தை நடத்தி வருகிறார்.

இதில் பராமரிப்பு மையத்தில் குழந்தைகளைப் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவை அனைத்தைப் பற்றியும் மக்கள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறார்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.