சமீபகாலமாக லைக்கா நிறுவனம் படத்தை தயாரிப்பதை நிறுத்தி விடப் போவதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. உண்மையில் லைக்கா நிறுவனத்திற்கு என்னதான் ஆயிற்று. ஏனெனில் தொடர்ந்து அந்த நிறுவனம் தயாரிக்கும் படங்கள் தோல்வியில் முடிந்திருக்கின்றன. இனிமேல் படங்களை தயாரிக்க போவதில்லை என்ற முடிவில் இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி வந்தன.
இதைப்பற்றி பிஸ்மி அவருடைய கருத்துக்களை தெரிவித்திருக்கிறார். லைக்கா நிறுவனத்தை பொருத்தவரைக்கும் முதன் முதலில் விஜய் நடிப்பில் வெளியான கத்தி திரைப்படம் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் முதன் முதலில் காலடி எடுத்துவைத்தது. இப்போது விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் அந்த படத்தை முடித்துவிட்டு அதோடு தயாரிப்பு பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க போகிறது.
அப்பா ஆரம்பித்ததை மகன் முடித்து வைக்கிறார் என பிஸ்மி கூறினா.ர் எத்தனையோ பல ஹிட் படங்களை கொடுத்து வந்த லைக்கா நிறுவனம் இன்று அதன் தயாரிப்பு பணியை நிறுத்தப் போவதாக அறிவித்திருப்பது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதுவும் கடைசியில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் லைக்கா நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடியாக மாறியது .
முதலில் விடாமுயற்சி திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் தயாரிப்பதாக இருந்தது. அப்போது அவருக்கு சம்பளமாக 65 கோடி பேசப்பட்டது. ஆனால் அஜித் தனக்கு 100 கோடி சம்பளம் வேண்டும் என கேட்டு இருக்கிறார். ஆனால் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் அவருக்கு 70 கோடி தருவதற்கு சம்மதம் தெரிவித்திருந்தது. இருந்தாலும் அஜித் தன்னுடைய சம்பளத்தில் உறுதியாக நின்றாராம்.
இதை அறிந்த நயன்தாரா லைக்கா நிறுவனத்தை அணுகி அஜித் கால்சீட் இருப்பதாகவும் ஆனால் அந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். அதோடு அவருக்கு சம்பளம் 100 கோடி என்று நயன்தாரா சொல்ல அதற்கு லைக்கா நிறுவனம் 120 கோடியே கொடுக்க தயார் என அஜித் மீது இருந்த நம்பிக்கையில் இறங்கி இருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் அஜித்தின் மார்க்கெட் நிலவரமே 60லிருந்து 70 கோடி தான் .
இப்படி இருக்க விடாமுயற்சி படமும் எதிர்பார்க்காத தோல்வியை தழுவியது. கலெக்ஷனிலும் மண்ணை கவ்வியது. இப்படியே போனால் நிலைமை இன்னும் மோசமாகி விடும் என்று கருதியே ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தோடு தயாரிப்பு பணியை நிறுத்த போவதாக அறிவித்திருக்கிறது