கார் வாங்க போறீங்களா….? இதுதான் சரியான நேரம்…. ரூ.75,000 ஆயிரம் வரை குறைப்பு…. மகேந்திரா நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு….!!
SeithiSolai Tamil March 22, 2025 08:48 PM

இந்தியாவில் பிரபலமான நிறுவனமான மஹிந்திரா இந்திய சந்தையில் தனது கார்களின் விலையை குறைத்துள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தில் XUV700 மாடலில் AX7 மற்றும் AX7 L என்று இரு வேரியண்ட்கள் உள்ளன. அதில் AX7 வேரியண்ட் கார்களின் விலையில் ரூ.45 ஆயிரமும் AX7 L வேரியண்ட் கார்களின் விலையில் ரூ.75 ஆயிரமும் குறைத்துள்ளது.

6 இருக்கைகள் கொண்ட AX7 என்ற காரின் விலை ரூ.21,64,000 ஆக இருந்த நிலை தற்போது ரூ.45,000 குறைத்து ரூ.21,19,000 க்கு விற்பனையாக உள்ளது.

6 இருக்கைகள் கொண்ட AX7L என்ற கார் ரூ.24,14,000 க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.75,000 குறைத்து ரூ.23,39,000 க்கு விற்பனையாக உள்ளது.

7 இருக்கைகள் கொண்ட AX7 என்ற காரின் விலை ரூ.21,44,000 ஆக இருந்த நிலை தற்போது ரூ.45,000 குறைத்து ரூ.20,99,000 க்கு விற்பனையாக உள்ளது.

7 இருக்கைகள் கொண்ட AX7L என்ற கார் ரூ.23,94,000 க்கு விற்பனை செய்து வந்த நிலையில் தற்போது ரூ.75,000 குறைத்து ரூ.23,19,000 க்கு விற்பனையாக உள்ளது எனவும் அறிவித்துள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.