இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 18-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 3-வது நாளான நேற்று 4-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. அதில் டெல்லி கேப்பிடல்ஸ்-லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் ஆகிய அணிகள் மோதிக்கொண்டது. இந்த நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் பேட்டிங் செய்த லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்கள் குவித்தது. இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 75 ரன்கள், மிட்செல் மார்ஷ் 72 ரன்களும் அடித்தனர். டெல்லி தரப்பில் ஸ்டார்க் 3 கிரிக்கெட்டுகளை வீழ்த்தினார். 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
முதல் ஓவரிலேயே ஜேக் பிரஷர் மெக்கர்க், அபிஷேக் போரல் ஆகியோரின் விக்கெட்டுகளை லக்னோ பந்துவீச்சாளர் ஷர்துல் தாகூர் வீழ்த்தினார். இதனையடுத்து சமீர் ரிஸ்வியும் 4 ரன்கள் இல்லையே அவுட் ஆனார். டெல்லி அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி சீரான இடைவெளியில் வைக்கட்டுகளை இழந்தது. ஸ்டெப்ஸ் 34 ரன்கள், விப்ராஜ் நிகாம் 39 ரன்கள் என விரைவாக அடித்து வெற்றியை நோக்கி பயணித்தனர். கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் முதல் இரண்டு பந்துகளில் மோகித் சர்மா ஒரு ரன் அடித்தார். மூன்றாவது பந்தில் சிக்சர் அடித்து அசுதோஷ் சர்மா ஆட்டத்தை முடித்து வைத்தார். இதனால் 19.3 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து டெல்லி அணி 211 ரன்கள் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அசுதோஷ் சர்மா 66 ரன்கள் உடன் களத்தில் இருந்தார்.