ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 4வது லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரர் மிட்செல் மார்ஷ் அதிரடியாக ஆடினார், ஆனால் மறுமுனையில் மார்க்ரம் 15 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதன்பிறகு வந்த நிக்கோலஸ் பூரன், மார்ஷுடன் சேர்ந்து அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். மார்ஷ் 72 ரன்களிலும், நிக்கோலஸ் பூரன் 75 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதிக்கட்டத்தில் டேவிட் மில்லர் அதிரடியாக விளையாடி 27 ரன்கள் சேர்த்தார். இதனால், 20 ஓவரில் லக்னோ அணி 8 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் எடுத்தது.
210 என்ற கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. 7 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்தனர். 65 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்ததால், டெல்லி அணி படுதோல்வி அடையும் என எதிர்பார்க்கப்பட்டது.
இதன் பின்னர் வந்த ஸ்டப்ஸ் மற்றும் நிகம், முறையே 34 மற்றும் 39 ரன்கள் சேர்த்தனர். அதிரடியாக ஆடிய அசுதோஷ் சர்மா சர்மா 28 பந்துகளில் 50 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடினார்.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், டெல்லி அணிக்குக் கையில் ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. அதற்கு பயப்படாமல், அசுதோஷ் சர்மா சிக்ஸர் அடித்து டெல்லி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
இறுதியில், 19.3 ஓவரில், டெல்லி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 211 ரன்கள் எடுத்து திரில்லாக வெற்றி பெற்றது.