#featured_image %name%
ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs குஜராத் – அகமதாபாத் – 25.03.2025
குஜராத் போராடி தோற்றதுமுனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்
பஞ்சாப் கிங்க்ஸ் அணி (243/5, ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 97, பிரியன்ஷ் ஆர்யா 47, ஷஷாங்க் சிங் 44, மார்கஸ் ஸ்டோயினிஸ் 20, சாய் கிஷோர் 3/30, ரபாடா மற்றும் ரஷீத் கான் தலா ஒரு விக்கட்) குஜராத் டைடன்ஸ் அணியை (232/5, சாய் சுதர்ஷன் 74, ஜாஸ் பட்லர் 54, ரூதர்ஃபோர்ட் 46, ஷுப்மன் கில் 33, அர்ஷதீப் சிங் 2/36, மார்கோ ஜன்சன் மற்றும் மேக்ஸ்வெல் தலா ஒரு விக்கட்) பதினோரு ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பூவா தலையா வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. பஞ்சாப் அணியின் பிரப்சிம்ரன் சிங் (8 பந்துகளில் 5 ரன்) விரைவில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் வந்த ஷ்ரேயாஸ் ஐயர் (42 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன், 5ஃபோர், 9 சிக்சர்) மற்றொரு தொடக்க வீரரான பிரியன்ஷ் ஆர்யா உடன் (23 பந்துகளில் 47 ரன், 7 ஃபோர், 2 சிக்சர்) அற்புதமாக ஆடினார்.
இவர்கள் இருவரைத்தவிர அஸ்மத்துல்லா ஓம்சராய் (15 பந்துகளில் 16 ரன்), மார்கஸ் ஸ்டோயினிஸ் (15 பந்துகளில் 20 ரன்), ஷஷாங்க் சிங் (16 பந்துகளில் 44 ரன், 6 ஃபோர், 2 சிக்சர்) ஆகியோரும் சிறப்பாக ஆடினர். இதனால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கட்டுகள் இழப்பிற்கு 243 ரன் எடுத்தது.
244 ரன் என்ற கடினமான வெற்றி இலக்கை அடைய இரண்டாவதாக ஆடவந்த குஜராத் அணிக்கு சாய் சுதர்ஷன் (41 பந்துகளில் 74 ரன், 5 ஃபோர், 6 சிக்சர்) சிறப்பான தொடக்கம் தந்தார். அவருடன் ஜோடி சேர்ந்த ஷுப்மன் கில் (14 பந்துகலில் 33 ரன், 2 ஃபோர், 3 சிக்சர்) நிலைத்து ஆடவில்லை என்றாலும் அதிரடியாக ஆடினார்.
அதன் பின்னர் ஆடவந்த ஜாஸ் பட்லர் (33 பந்துகளில் 54 ரன்) மற்றும் ரூதர்ஃபோர்டு (28 பந்துகளில் 46 ரன்) போன்றோர் சிறப்பாக ஆடியும் எடுக்க வேண்டிய ரன்ரேட் அதிகமாக இருந்தது. 15ஆவது ஓவர் முடிவில் எடுக்க வேண்டிய ரன்ரேட் 14ஆக் இருந்தது.
18ஆவது ஓவர் முடிவில் அது 22.5 ஆகிவிட்டது. அந்த அழுத்தத்தில் பட்லர், ஒரு சோகமான முறையில் ராகுல் திவாத்தியா (6 ரன்), ரூதர்ஃபோர்டு (46 ரன்) மூவரும் ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 232 ரன் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.
பஞ்சாப் அணியின் மட்டையாளர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
News First Appeared in