அமெரிக்காவில் உள்ள மியாமி பகுதியை சேர்ந்த ஜானிகா அலெக்சாண்டர் (28) என்பவர் ஹியாலியாவில் உள்ள 71 வயதான முதியவரை கேலியன் அடல்ட் சூப்பர் ஸ்டோர் என்ற இடத்தில் சந்தித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு இருவரும் கடந்த மார்ச் 5ஆம் தேதி மோட்டல் எக்ஸ் என்ற ஹோட்டலுக்கு சென்றுள்ளனர். அங்கு இருவரும் பாலியல் உறவில் இருந்துள்ளனர். அதன்பின் ஜானிகா அந்த முதியவரின் கையில் உள்ள ரோலக்ஸ் கடிகாரத்தை கழற்றித் தருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார்.
ஆனால் அதற்கு முதியவர் மறுத்ததும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஜானிகா அந்த முதியவரின் கைக்கடிகாரத்தை பறித்துள்ளார். உடனே அந்த முதியவர் தனது செல்போனில் காவல்துறைக்கு போன் செய்ய முயன்ற போது அவரை ஜானிகா பெப்பர் ஸ்பிரேயால் தாக்கி விட்டு அவருடைய பணப்பை மற்றும் செல்போன், வாட்ச் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர் ஹோட்டலை விட்டு வெளியேறும் முன் பணப்பையையும் அவரது செல்போனையும் பார்க்கிங் ஏரியாவில் எறிந்துவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஹோட்டலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் ஜானிகா பச்சை குத்தி இருந்ததை கண்டறிந்தனர். மேலும் அவர் மெர்சிடஸ் பென்ஸ் காரில் புறப்பட்டு சென்றதும் சிசிடிவி காட்சிகளில் தெரியவந்தது.
இதனை அடுத்து அந்தக் கார் ஒரு எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் இருந்து வாடகைக்கு எடுக்கப்பட்ட கார் என காவல்துறையினர் விசாரணையில் கண்டுபிடித்தனர். இந்த ஆதாரங்களை வைத்து ஜனிகாவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் மீது வயது முதிர்ந்த நபரை தாக்கியதற்காகவும், அவரிடம் உள்ள பொருட்களை திருடிச் சென்றதற்காகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.