வங்கிகளுக்கு புதிய உத்தரவிட்ட ஆர்பிஐ.... மார்ச் 31ம் தேதி வங்கிகள் இயங்குமா?
ET Tamil March 29, 2025 01:48 AM

2024-25 ஆம் ஆண்டுக்கான அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் கணக்கிடுவதற்கு வசதியாக மார்ச் 31 ஆம் தேதி சிறப்பு தீர்வு நடவடிக்கைகளில் அனைத்து வங்கிகளும் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ட்டுக் கொண்டது.2024-25ம் நிதியாண்டின் இறுதி நாள் மார்ச் 31ம் தேதியாகும். இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதி ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறையாகும். இந்தியாவில் ஏப்ரல் 1 முதல் மார்ச் 31 வரை நிதியாண்டைப் பின்பற்றுகிறது.வார இறுதி விடுமுறை மற்றும் திங்கட்கிழமை தொடர்ந்து விடுமுறை வருகிறது. நாடு முழுவதும் வருமான வரி அலுவலகங்கள் மற்றும் CGST அலுவலகங்கள் மார்ச் 29 முதல் மார்ச் 31 வரை திறந்திருக்கும். இந்த நிலையில் 2024-25ம் நிதியாண்டின் கணக்குகளை அரசு மார்ச் 31ம் தேதியுடன் முடிக்கும். இதன் காரணமாக 2024-25 ஆம் ஆண்டுக்கான ஏஜென்சி வங்கிகளால் செய்யப்படும் அனைத்து அரசு பரிவர்த்தனைகளும் அதே நிதியாண்டிற்குள் கணக்கிடப்பட வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியிருந்தது.அரசு ரசீதுகள் மற்றும் கொடுப்பனவுகளைக் கையாளும் அனைத்து கிளைகளையும் மார்ச் 31, 2025 அன்று வழக்கமான வேலை நேரம் வரை அரசு பரிவர்த்தனைகள் தொடர்பான கவுன்ட்டர் பரிவர்த்தனைகளுக்காக திறந்திருக்குமாறு ஆர்பிஐ அறிவுறுத்தி உள்ளது. மேலும் மார்ச் 31ம் தேதியிட்ட காசோலைகளையும் கிளியர் செய்ய வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நடப்பு நிதியாண்டிற்கான (2024-25) அனைத்து அரசு பரிவர்த்தனைகளையும் மார்ச் 31, 2025க்குள் கணக்கிட்டுக் கொள்ள வசதியாக, மார்ச் 31 அன்று அரசு காசோலைகளுக்கு பிரத்தியேகமாக CTS இன் கீழ் சிறப்பு தீர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அது கூறியது.எனவே மார்ச் 31ம் தேதி வங்கிகளில் சில குறிப்பிட்ட சேவைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும். இதர சேவைகள் இயங்க வாய்ப்பில்லை. அதாவது அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை அன்றைய தினம் செலுத்தலாம்.