1999 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த தாஜ்மஹால் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமா உலகிற்கு நடிகராக அறிமுகமானார். அதற்குப் பிறகு உலகிற்கு கடல்பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம் போன்ற பல படங்களில் இவர் நடித்திருக்கிறார். மேலும், மனோஜ் பல படங்கள் நடித்திருந்தாலும் பெரிய அளவில் சினிமாவில் சாதிக்க முடியவில்லை.
பின்பு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் நடிப்பிலிருந்து விலகி பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகவும் பணிபுரிந்திருக்கிறார். தற்போது இவர் முழுநேரமும் இயக்குனராக அதிக கவனம் செலுத்தி முழுநேரமும் கூறப்படுகிறது. அதோடு இவர் தீவிரமாக படம் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. கடைசியாக சிம்பு நடிப்பில் வெளிவந்த ஈஸ்வரன், மாநாடு ஆகிய இரு படங்களிலும் முக்கிய வேடத்தில் மனோஜ் நடித்திருந்தார்.
சாதுரியன் என்ற படத்தில் நடிக்கும் போது தன்னுடன் நடித்த நடிகை நந்தனாவுக்கும் அவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இவர்கள் ஏற்கெனவே நண்பர்கள் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் காதலுக்கு இரு வீட்டாரும் பச்சைக் கொடி காட்டியதை அடுத்து நந்தனாவின் சொந்த ஊரான கோழிக்கோட்டில் இவர்களது திருமணம் 2006 ஆம் ஆண்டு நடந்தது.
நந்தனா கேரளத்து பெண்! இதனால் அங்கு அவர்கள் முறைப்படி நடந்தது. இதையடுத்து சென்னையில் இருவருக்கும் வரவேற்பை பாரதிராஜா நடத்தினார். நந்தனா- மனோஜ் தம்பதிக்கு இரு பெண் குழந்தைகள் ஆர்த்திகா, மதிவதனி ஆகியோர் ஆவர். திருமணத்திற்கு பிறகு நந்தனா நடிக்கவில்லை. கணவரின் தயாரிப்பு நிறுவனத்தில் அவருக்கு உதவியாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
மூத்த மகள் ஆர்த்திகா இயக்குநராக வேண்டும் என ஆர்வம் காட்டி வருவதாக சொல்லப்படுகிறது. இளைய மக்கள் கல்லூரியில் படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த மாதம்தான் மனோஜுக்கு ஓபன் ஹார்ட் சர்ஜரி செய்யப்பட்டது. இதையடுத்த படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் வீட்டில் ஓய்வெடுத்து வந்தாராம். நேற்று மாலை 6 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மயங்கினாராம். அவரை சிம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றதில் அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் திரையுலகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது.