பாலிவுட் பாடகி நேஹா கக்கர், மெல்போர்னில் நடைபெற்ற லைவ் கச்சேரிக்கு 3 மணி நேரம் தாமதமாக வந்ததால் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரெட்டிட் தளத்தில் பகிரப்பட்ட வீடியோவில், தாமதத்திற்கு வருந்தி நேஹா கக்கர் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டதும், கண்ணீர் மல்க உரையாற்றியதும் காணப்படுகிறது. “நீங்கள் மிகவும் இனிமையாக இருக்கிறீர்கள். நான் இதுவரை யாரையும் இப்படி காத்திருக்க வைத்ததில்லை. உண்மையில் மன்னிக்கவும்” என உணர்ச்சிபூர்வமாக கூறியுள்ளார். இது ரசிகர்களிடையே கலவையான எதிர்வினைகளை உருவாக்கியது. சிலர் அவரது உணர்வுகளைப் புரிந்துகொண்டு ஆதரித்திருந்தாலும், மற்றவர்கள் கோபத்தோடு விமர்சனம் செய்துள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு நேஹா கக்கர் பெற்றுக்கொண்ட தொகை தொடர்பிலும் விவாதங்கள் எழுந்துள்ளன. திருமணங்கள் போன்ற தனியார் நிகழ்ச்சிகளுக்கு ₹50 லட்சம் முதல் ₹70 லட்சம் வரையில் பெறுவதாக தகவல்கள் கூறுகின்றன. சில பாடகர்கள் திருமண நிகழ்ச்சிக்கே ₹5 கோடி வரை பெறுவதால், கச்சேரி தொகையும் அதிகம் இருக்கும் என கணிக்கப்படுகிறது. மெல்போர்ன் நிகழ்ச்சிக்கு வந்த ரசிகர்கள் சிலர், “இது இந்தியா இல்ல, ஆஸ்திரேலியா” என்றும், “மூன்று மணி நேரமா காத்திருந்தோம்” என்றும் ஆத்திரமாக சத்தமிட்டுள்ளனர்.
View this post on Instagram