“ஆண்மையை நிரூபிக்க கொலை செய்யும் பழங்குடியின மக்கள்”… இவங்கதான் உலகிலேயே மிகவும் பயங்கரமானவர்களாம்…!!
SeithiSolai Tamil March 26, 2025 10:48 PM

உலகில் பல பகுதிகளில் மக்கள் நவீன வசதிகளுடன் வாழ்ந்தாலும், இன்னும் பல பழங்குடிகள் நம் பாரம்பரியத்தின் அடையாளங்களாக பழமையான மரபுகளை கடைபிடித்து வருகின்றனர். அந்த வகையில் எத்தியோப்பியாவில் உள்ள முர்சி பழங்குடியினர், மிகவும் அபாயகரமான பழங்குடியினமாக கருதப்படுகிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறையும், பழக்க வழக்கங்களும் உலகமெங்கிலும் பரவலாக விவாதிக்கப்படும் ஒன்றாக இருக்கிறது.

முர்சி பழங்குடியினர்கள் தெற்குப் எத்தியோப்பியாவுக்கும், சூடான் எல்லைக்கும் அருகிலுள்ள ஓமோ பள்ளத்தாக்கில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களிடம் மிகவும் ஆபத்தான ஆயுதங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒருவர் மீது சந்தேகம் ஏற்பட்டாலே கூட வன்மையாக கொலை செய்வதை சாதாரணமாகக் கருதுகின்றனர். கொலை செய்வது, ஆண்மையின் அடையாளம் என்ற எண்ணம் இப்பழங்குடியினரிடம் நிறைந்து உள்ளது.

மொத்தமாக சுமார் 10,000 பேர் இந்த முர்சி பழங்குடியில் வசித்து வருகிறார்கள். ‘மற்றவர்களை கொல்லாமல் வாழ்வது பொருளற்றது’ என்ற எண்ணத்தை கொண்டிருக்கும் இந்த மக்கள், இதுவரை நூற்றுக்கணக்கான கொலைகளை நிகழ்த்தியுள்ளனர். இவர்களின் எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தாலோ, சமூகத்தை அணுக முயன்றாலோ உடனடியாக கொலை செய்யப்படலாம் என்பதாலேயே, அவர்கள் மிகவும் அபாயகரமான பழங்குடியினர் எனக் கருதப்படுகிறார்கள்.

இந்த பழங்குடியினரின் வன்முறை காரணமாக எத்தியோப்பிய அரசு, அவர்களுடன் வெளிநாட்டவர்களின் தொடர்பைத் தடை செய்துள்ளது. மேலும் குறிப்பாக எந்த வெளிநாட்டினரும் முர்சி பழங்குடியினரை பார்க்க விரும்பினாலும், ஆயுதம் உடைய பாதுகாப்பு படையுடன் மட்டுமே அவர்களை சந்திக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இது அவர்களிடமிருந்து பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் முக்கிய நடவடிக்கையாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.