இந்தியா vs பாகிஸ்தான் விருந்தோம்பல் பற்றி ஒரு கனடிய பயணி தெரிவித்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும் பாகிஸ்தானும் எது சிறந்த விருந்தோம்பலை வழங்குகிறது என்பதை கேள்வி எழுப்பிய ஒரு இன்ஸ்டாகிராம் பயனர், கனடிய பயணி நோலன் சாமூர் (Nolan Saumure) பாகிஸ்தான் தான் சிறந்தது என்று தயக்கமின்றி பதிலளித்துள்ளார்.
அதற்கு காரணம் கூறிய நோலன், இந்தியாவில் வெளிநாட்டவர்கள் பணமுள்ள வாடிக்கையாளர்களாகவே பார்க்கப்படுகிறார்கள் என விமர்சித்தார். ஆனால் பாகிஸ்தானில் மக்கள் உண்மையான விருந்தோம்பலோடு “உணவு எடுத்துக்கொள்ளுங்கள், என் வீட்டில் தூங்கலாம்” என அன்புடன் வரவேற்கிறார்கள் என கூறினார். “இந்தியாவில் மக்கள் வெளிநாட்டவர்களை ATM மாதிரி பார்க்கிறார்கள்” என்றும் விமர்சித்துள்ளார். இந்த வீடியோ 44 இலட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளதுடன், இரண்டு நாடுகளிலும் பல்வேறு எதிர்வினைகளை உருவாக்கியுள்ளது.
இதற்கு எதிராகவும் ஆதரவாகவும் பலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிலர் பாகிஸ்தான் மக்கள் மிகவும் நட்பாக இருப்பதாகவும், இந்தியர்கள் அந்நியர்கள் போலவே நடத்துகிறார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஒருசிலர் இந்தியாவில் சுற்றுலா வணிகம் வளர்ந்திருப்பதால் மக்கள் பழகி விட்டனர், பாகிஸ்தானில் வெளிநாட்டவர்களை அரிதாக காண்பதால் அவர்கள் விசேஷமாக நடத்துகிறார்கள் என விளக்கம் அளித்துள்ளனர். சிலர் நோலன் சாமூரின் கருத்தை எதிர்த்து, “இந்தியர்கள் மீது வெள்ளையர்கள் இன்னும் இப்படி princess treat எதிர்பார்க்கிறதா?” எனக் கேள்வியெழுப்பியும் உள்ளனர். மேலும் இதோ அந்த வீடியோ,
View this post on Instagram