ஜப்பானில் உள்ள மிகவும் திறமையான விண்வெளி ஆராய்ச்சியாளராக கொய்ச்சி வகாடா திகழ்கிறார். இவர் ஜப்பான் விண்வெளி ஆய்வு நிலையத்தில் மிக முக்கியமான விண்வெளி ஆராய்ச்சியாளர். இவர் தனது வாழ்நாளில் 500 நாட்களுக்கும் மேலாக விண்வெளி சுற்றுப் பாதையில் செலவிட்டுள்ளார். இவர் சமீபத்தில் விண்வெளி நிலையத்தில் ஜீரோ கிராவிட்டி சூழலில் பேஸ்பால் விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது.
இந்த வீடியோவை அமெரிக்க தொழிலதிபரான எலான் மஸ்க் தனது இணையதள பக்கத்தில் மறுபதிவிட்டிருந்தார். இதனை எலான் மஸ்க் பகிர்ந்த பிறகு 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், விண்வெளி வீரரான வகாடா சர்வதேச விண்வெளி நிலையத்தில் பேஸ்பால் விளையாடுகிறார். அப்போது பந்து ஜீரோ கிராவிட்டியால் காற்றில் மிதக்கிறது. அதனை அவரே பேட்டிங் செய்கிறார். இதேபோன்று பேட்டிங், பீல்டிங், பௌலிங் என ஒட்டுமொத்த விளையாட்டையும் ஒரே நபராய் ஆடுகிறார். இந்த வீடியோ பார்ப்போருக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஜப்பானில் இந்த சமயம் மேஜர் லீக் பேஸ் பால் சீசன் தொடக்க ஆட்டம் தொடங்க உள்ளதால் இந்த பதிவு அந்த விளையாட்டுக்கான சரியான நேரத்தில் நினைவூட்டும் விதமாக அமைந்துள்ளது என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.