பிரபல நடிகை சிந்தியானா சாண்டான்ஜலோ தனது 58வது வயதில் மரணமடைந்த செய்தி, ஹாலிவுட் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது. “A Terribly Nice Family” என்ற தொடரில் தனது நடிப்பால் புகழ் பெற்ற சிந்தியானா, மார்ச் 24 அன்று மாலிபுவில் உள்ள தன் வீட்டில் மயக்கம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டார். இதனையடுத்து சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். அவரது மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. வீட்டில் கண்டெடுக்கப்பட்ட காஸ்மெட்டிக் ஊசிகள் மரணத்துடன் தொடர்புடையதா என்பது குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த மரணம் சம்பந்தமான விசாரணையை லாஸ் ஏஞ்சலஸ் கவுண்டி ஷெரிஃப் துறை மேற்கொண்டு வருகிறது. மரணம் இயல்பானதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பதைக் கண்டறிய ஹோமிசைடு குழுவும் சேர்ந்துள்ளது. நடிகையின் மரணத்தை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் செய்திகளை பகிர்ந்து வருகிறார்கள். ஜெர்மன் நடிகை செனியா சீபெர்க் தனது இரங்கலில், “என் அழகான சிந்தியானா, நீ போய்விட்டாய் என்பதை நம்ப முடியவில்லை,” எனக் கூறி வேதனை வெளிப்படுத்தியுள்ளார்.