அதிமுக உட்கட்சி விவகாரம் பூதாகரமாக வெடித்தது. எடப்பாடி பழனிச்சாமியும் ஓ.பன்னீர்செல்வம் ஒன்றாக இணைந்து செயல்படுவார்களா? மாட்டார்களா? என கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஓ.பன்னீர் செல்வத்தை அதிமுகவில் இணைக்க முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார்.
மேலும் அதிமுகவினர் கோயிலாக கருதும் கட்சியின் தலைமை அலுவலகத்தை ரவுடிகளை வைத்து ஓ.பன்னீர்செல்வம் தாக்கியதாக எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். எனவே அதிமுகவில் இருக்கவே தகுதியற்றவர் பன்னீர்செல்வம் என விமர்சித்துள்ளார். மேலும் தமிழகத்தில் கொலை, கொள்ளை சம்பவங்கள் தலைவிரித்து ஆடுவதாக எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.