பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியா என்ற தீவு நாட்டில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நாட்டில் சுற்றுலா தளங்கள் அதிகமாக உள்ளது. தற்போது இந்த நாட்டில் பெரும்பாலான மக்கள் பேஸ்புக்கை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
அதாவது கிட்டத்தட்ட 13 லட்சம் பேர் பேஸ்புக்கில் கணக்கு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த பேஸ்புக் மூலம் பொய்யான தகவல்களை பரப்புவது மற்றும் ஆபாச படங்களை அதிக அளவில் பகிர்வது போன்ற தகாத செயல்களில் பயனர்கள் ஈடுபடுவதாக தொடர்ந்து நாட்டு அரசுக்கு புகார்கள் வந்துள்ளன.
இதனால் பேஸ்புக்கிற்கு பப்புவா நியூ கினியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பேஸ்புக்கை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த திடீர் அதிரடி நடவடிக்கை மக்களின் கருத்து சுதந்திரத்தையும், பேச்சுரிமையும் பறிப்பதற்காக செய்யப்படும் சதி வேலையாகும் என எதிர்க் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.