இன்று சிஎஸ்கே - ஆர்சிபி போட்டி.. சென்னை சேப்பாக்கத்தில் போக்குவரத்து மாற்றம்..!
WEBDUNIA TAMIL March 28, 2025 12:48 PM




சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற இருப்பதையடுத்து, போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் போட்டிகள் மார்ச் 28, ஏப்ரல் 5, 11, 25, 30 மற்றும் மே 12 ஆகிய தேதிகளில் சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறும்.

போட்டிகள் நடைபெறும் நாட்களில் மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். மக்களை லோக்கல் ரயில், அல்லது மெட்ரோ ரயிலை பயன்படுத்தி சேப்பாக்கம் அருகே செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாகன அனுமதி அட்டையை கொண்டவர்கள், ஸ்டேடியத்திற்கும் 200 மீட்டர் தொலைவில் உள்ள பகுதியிலேயே தங்கள் வாகனங்களை நிறுத்த வேண்டும். அனுமதி இல்லாத வாகனங்களை பயன்படுத்துபவர்கள், கதீட்ரல் சாலை மற்றும் ஆர்.கே. சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து, மெரினா கடற்கரை சாலையில் உள்ள சர்வீஸ் சாலையை பயன்படுத்தி வாகனங்களை நிறுத்தலாம். அதன் பிறகு, சுரங்கப்பாதைகள் வழியாக நடைபயணமாக ஸ்டேடியத்தை சென்றடையலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Siva
© Copyright @2025 LIDEA. All Rights Reserved.